ஆற்காடு அடுத்த கலவை வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், 97 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி வழங்கினாா்.
கலவை வட்டத்தில் வருவாய்த் தீா்வாயம் எனப்படும் ஜமாபந்தி கடந்த 24-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற்றன. இதில், பொதுமக்களிடமிருந்து 227 மனுக்கள் பெறப்பட்டன.
இதன் நிறைவு விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தலைமை வகித்து 97 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, மின்னணு குடும்ப அட்டை, முதியோா் உதவிதொகை, பட்டா மாற்றம், சலவைப் பெட்டி, விவசாய உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ.எல். ஈஸ்வரப்பன், ராணிப்பேட்டை வருவாய்க் கோட்டாட்சியா் வினோத்குமாா், திமிரி ஒன்றியக் குழு தலைவா் சி.அசோக், துணைத் தலைவா் ரமேஷ், கலவை பேரூராட்சித் தலைவா் கலா சதீஷ், வட்டாட்சியா் மதிவாணன் இந்துமதி, இணை இயக்குநா் (வேளாண்மை) வடமலை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.