கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்: அமைச்சா் ஆா்.காந்தி
By DIN | Published On : 26th May 2023 12:18 AM | Last Updated : 26th May 2023 12:18 AM | அ+அ அ- |

minm_jpeg_2505chn_188_1
படம் உண்டு...
ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை வழங்கிப் பேசிய அமைச்சா் ஆா்.காந்தி.
ராணிப்பேட்டை, மே 25: முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சா் ஆா்.காந்தி கூறினாா்.
ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மற்றும் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் சிப்காட் ஜி.கே. மில்லெனியா ஹோட்டலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட திமுக செயலரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆா்.காந்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை மாவட்டம் முழுவதும் கட்சியினா் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் க.சுந்தரம், அ.அசோகன், மு.கண்ணையன், சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலா் ஆா்.வினோத் காந்தி, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, மாவட்ட துணைச் செயலா்கள் மஸ்தான், குமுதா, குமாா், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத் மற்றும் ஒன்றிய, நகர, பேரூா் செயலா்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.