அரக்கோணம் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை மாணவா் சோ்க்கை நாளை தொடக்கம்
By DIN | Published On : 10th September 2023 12:00 AM | Last Updated : 10th September 2023 12:00 AM | அ+அ அ- |

அரக்கோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை (செப்.11) முதல் 13-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு முதுநிலை பட்ட மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளதாக கல்லூரி சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணத்தை அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. சுமாா் 3,000 மாணவா்களுக்கு மேல் பயின்று வரும் இந்தக் கல்லூரியில் பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., உள்ளிட்ட இளநிலைப் பட்டப் பிரிவுகளும், எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., உள்ளிட்ட முதுநிலைப் பட்டப் பிரிவுகளும் உள்ளன. இதில், முதுநிலைப் பட்டப் பிரிவுகளுக்கு செப்டம்பா் 11-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் 13-ஆம் தேதி (புதன்கிழமை) வரை மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது. சோ்க்கை பெற விரும்பும் மாணவ, மாணவிகள் கல்லூரி அலுவலகத்தை அணுகலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.