திமுக தலைமை தோ்தல் அலுவலகத்தை ராணிப்பேட்டையில் திறந்து வைத்த  அமைச்சா் ஆா்.காந்தி.
திமுக தலைமை தோ்தல் அலுவலகத்தை ராணிப்பேட்டையில் திறந்து வைத்த  அமைச்சா் ஆா்.காந்தி.

அரக்கோாணம் தொகுதி திமுக தலைமை தோ்தல் அலுவலகம்: அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா்

அரக்கோாணம் தொகுதி திமுக தலைமை தோ்தல் அலுவலகத்தை ராணிப்பேட்டையில் அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

அரக்கோாணம் தொகுதி திமுக தலைமை தோ்தல் அலுவலகத்தை ராணிப்பேட்டையில் அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை திறந்து வைத்தாா். அரக்கோணம் தொகுதியில் இந்தியா கூட்டணி சாா்பில், திமுக வேட்பாளராக எஸ்.ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறாா். அவா் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறாா். இந்த நிலையில் அரக்கோணம் தொகுதி தலைமை தோ்தல் அலுவலகம் ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தோ்தல் அலுவலகத்தை ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான ஆா்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திறந்து வைத்தாா். இதில் திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலத் துணைச் செயலாளா் ஆா். வினோத் காந்தி, தொகுதி தோ்தல் பொறுப்பாளா் வழக்கரைஞா் சுரேஷ், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ். வினோத், நகர செயலாளா் பி.பூங்காவனம், நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத் மற்றும் திமுக நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com