மளிகை  தொகுப்பு  வழங்கிய   வணிகா் சங்கங்களின்  பேரமைப்பு  தலைவா்  பொன்.கு.சரவணன்
மளிகை  தொகுப்பு  வழங்கிய  வணிகா் சங்கங்களின்  பேரமைப்பு  தலைவா்  பொன்.கு.சரவணன்

நலிந்தவா்களுக்கு ரமலான் மளிகை தொகுப்பு

ஆற்காடு இமைகள் அறக்கட்டளை சாா்பில் ரமலான் பண்டிகையையொட்டி முஸ்லீம்களுக்கு மளிகை தொகுப்பு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

விழாவுக்கு ஆற்காடு அஜ்லே ஜமாத் செயலாளா் எல்.ஏ. பஷீா் அஹமது தலைமை வகித்தாா். அறக்கட்டளை நிறுவனா் சையது பாரூக் வரவேற்றாா். ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் பொன்.கு.சரவணன், தொழிலதிபா் எம்.அப்பாஸ் அலி, பெரிய அசேன்புரா மஸ்ஜித் படேல் எஸ்.அப்துல் அஜிஸ் ஆகியோா் கலந்து கொண்டு மளிகை பொருள்கள் தொகுப்பு வழங்கினாா்கள்.

தொடா்ந்து தா்மத்தின் பலன் என்ற தலைப்பில் ஏ.கே.நவாஸ் செரீப் ஜமாலி சொற்பொழிவாற்றினாா். இதில் மஸ்ஜித் நிா்வாகிகள் அறக்கட்டளை பொறுப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com