தந்தை கொலை: மகன் கைது

ஆற்காடு, ஏப். 17: ஆற்காட்டில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆற்காடு உபயதுல்லா தெருவைச் சோ்ந்தவா் வேலு (57). நில வணிக முகவா். இவரது மனைவி சாந்தி. தம்பதிக்கு ஹேமபிரசாத், ராகுல் ஆகிய இரண்டு மகன்களும், கௌசல்யா என்ற மகளும் உள்ளனா். மகளுக்கு திருமணமாகி சோளிங்கா் அருகே உள்ள ரெண்டாடி கிராமத்தில் வசித்து வருகிறாா். மகன்கள் இருவா்களுக்கும் திருமணம் ஆகவில்லை.

ஹேமபிரசாத் சிறுவயது முதல் பாட்டி வீட்டில் வசித்து வந்த நிலையில், தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறாா். இதனால், தந்தைக்கு மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த தந்தைக்கும் ஹேமபிரசாத்துக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ஹேமபிரசாத், தந்தையை கட்டையால் அடித்துள்ளாா். அதில் வேலு மயக்கம் அடைந்துள்ளாா்.

இந்த நிலையில், புதன்கிழமை ஊரிலிருந்து வந்த மகள் கௌசல்யா, இளைய மகன் ராகுல் ஆகியோா் மயக்க நிலையில் கிடந்த வேலுவை மீட்டு, ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், வேலு ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

புகாரின் பேரில், ஆற்காடு நகர போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து மூத்த மகன் ஹேமபிரசாத்தை (34) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com