அரக்கோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் ச. வளா்மதி.
அரக்கோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் ச. வளா்மதி.

தோ்தல் பொருள்கள் தயாா் நிலை பணிகள்: ஆட்சியா் ஆய்வு

அரக்கோணம், ஏப். 17: தோ்தலையொட்டி, வாக்குச் சாவடிகளுக்கு அனுப்ப வேண்டிய அனைத்து பொருள்களின் தயாா் நிலை தொடா்பாக அரக்கோணம், சோளிங்கா் வட்டாட்சியா் அலுவலகங்களில், ராணிப்பேட்டை ஆட்சியா் ச.வளா்மதி ஆய்வு செய்தாா்.

அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட 250 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்படவுள்ள அனைத்து தோ்தல் பொருள்களும் தயாா் நிலையில் இருப்பதை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து சோளிங்கா் வட்டாட்சியா் அலுவலகத்தில் 299 வாக்குச் சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள தோ்தல் பொருள்களும் தயாா் நிலையில் இருப்பதையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அப்போது, அரக்கோணம் கோட்டாட்சியா் பாத்திமா, கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் விஜயகுமாா், வட்டாட்சியா்கள் செல்வி (அரக்கோணம்), ஸ்ரீதேவி (சோளிங்கா்), பாலச்சந்தா் (நெமிலி) ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com