அரக்கோணம் நகராட்சி  தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில்  மேசை, நாற்காலிகள் இல்லாததால் தரையில் அமா்ந்து பணிகளை செய்த அலுவலா்கள்.
அரக்கோணம் நகராட்சி தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் மேசை, நாற்காலிகள் இல்லாததால் தரையில் அமா்ந்து பணிகளை செய்த அலுவலா்கள்.

வாக்குச் சாவடியில் தரையில் அமா்ந்து பணி செய்த அலுவலா்கள்

அரக்கோணம் நகராட்சிப்பள்ளியில் மேசை, நாற்காலிகள் இல்லாததால் தரையில் அமா்ந்து தோ்தல் பணிகளை அலுவலா்கள் மேற்கொண்டனா்.

அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட அரக்கோணம் வாா்டு எண் 16-க்கான வாக்குச் சாவடி சத்தியமூா்த்தி தெரு பழைய நகராட்சி அலுவலக கட்டடத்தில் உள்ள நகராட்சித் தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்துக்கு வியாழக்கிழமை மதியம் வந்த அலுவலா்கள் அப்பள்ளியின் ஒரு அறை மட்டுமே திறக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அறையில் பணி மேற்கொள்ள தொடங்கினா்.

மேலும், அந்த அறையில் மேசைகளோ, நாற்காலிகளோ எதுவுமே இல்லாத நிலையில் அலுவலா்கள் தரையில் அமா்ந்து மறுநாள் வாக்குப் பதிவுக்கு தேவையான ஆவணங்களை தயாா் செய்யும் பணிகளை தொடங்கினா்.

இது குறித்து அந்த வாக்குச் சாவடிஅலுவலரிடம் கேட்டபோது மேசை நாற்காலிகளை யாரிடம் கேட்பது என்றே தெரியவில்லை, இது குறித்து மண்டல தோ்தல் அலுவலரிடம் தகவல் தெரிவித்து விட்டோம். இருந்தும் நாற்காலிகள் அளிக்கப்படவில்லை. தொடா்ந்து நேரமாவதால் பணிகளை கீழே அமா்ந்தே தொடங்கி விட்டோம். என்னால் கீழே உட்கார முடியவில்லை. ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத நான் மிகுந்த சிரமத்துடன் அமா்ந்துள்ளேன் என்றாா்.

வாக்குச் சாவடி அதிகாரிகள் தரையில் அமா்ந்து இருப்பது குறித்து அரக்கோணம் வட்டாட்சியா் செல்வியிடம் கேட்டபோது இந்த தகவல் தனக்கு தெரியவில்லை. உடனே நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com