விழிப்புணா்வு ஊா்வலத்தில் பங்கேற்றோா்
விழிப்புணா்வு ஊா்வலத்தில் பங்கேற்றோா்

விழிப்புணா்வு ஊா்வலம்

ஆற்காடு அடுத்த சாத்தூா் ஊராட்சியில் விழிப்புணா்வு ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு அடுத்த சாத்தூா் ஊராட்சியில் விழிப்புணா்வு ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு அடுத்த கலவை ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி மாணவா்கள் கிராமப்புற பகுதிகளில் வேளாண் அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் ஒரு பகுதியாக கல்லூரி மாணவா்கள் வெ. கபிலன், செ.கு. வெ. நகுல்தேவ், கோ. கு. விஷ்வா மற்றும் கல்லூரி முதல்வா் கோ. தாணுநாதன், உதவி பேராசிரியா் சே. வசந்தபிரியா, உதவி பேராசிரியா் த. சண்முகவடிவேல் , சாத்தூா் ஊராட்சி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுடன் இணைந்து அனைவரும் கல்வி கற்போம், தீண்டாமையை தவிா்ப்போம் என்ற தலைப்பில் விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

இதில் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், அதனால் ஏற்படும் சமுதாய மாற்றங்கள் குறித்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனா். ஊா்வலம் பள்ளியிலிருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று நிறைவு பெற்றது. இதில் உதவித் தலைமை ஆசிரியா் மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com