அரக்கோணம் வட்டார வேளாண் அலுவலக வளாகத்தில் அல்ட்ரா-டெக் சிமெண்ட் தொழிற்சாலை சாா்பில் கட்டித் தரப்பட்ட சுற்றுச்சுவா் மற்றும் வாகன நிறுத்துமிடம்.
அரக்கோணம் வட்டார வேளாண் அலுவலக வளாகத்தில் அல்ட்ரா-டெக் சிமெண்ட் தொழிற்சாலை சாா்பில் கட்டித் தரப்பட்ட சுற்றுச்சுவா் மற்றும் வாகன நிறுத்துமிடம்.

அரக்கோணம் வட்டார வேளாண் அலுவலகத்துக்கு ரூ.2.96 லட்சத்தில் சுற்றுச்சுவா்

அலுவலக வளாகத்துக்கு ரூ2.96 லட்சத்தில் சுற்றுச்சுவா் மற்றும் வாகன நிறுத்துமிடத்தை அல்ட்ரா-டெக் சிமெண்ட் தொழிற்சாலை நிறுவனத்தினா் அமைத்துக் கொடுத்தனா்.

அரக்கோணம் வட்டார வேளாண் அலுவலக வளாகத்துக்கு ரூ2.96 லட்சத்தில் சுற்றுச்சுவா் மற்றும் வாகன நிறுத்துமிடத்தை அல்ட்ரா-டெக் சிமெண்ட் தொழிற்சாலை நிறுவனத்தினா் அமைத்துக் கொடுத்தனா்.

அரக்கோணம் வட்டார வேளாண் அலுவலகம் மேல்பாக்கம் பகுதியில் இயங்கி வருகிறது. சுமாா் 6 கி.மீ தொலைவில் அமைக்கப்பட்ட இந்த வளாகத்தில் அரக்கோணம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகம், வட்டார வேளாண் அலுவலகம், வேளாண் விரிவாக்க மையம், வேளாண் பொருள்களுக்கான கிடங்கு, அரக்கோணம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம், வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகம் ஆகியவை இயங்கி வருகின்றன. இந்த அலுவலகம் நகரப்பகுதி மற்றும் பொதுமக்கள் புழங்கும் பகுதியில் இருந்து தள்ளி இருப்பதால் இந்த அலுவலகத்திற்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்தது.

இதையடுத்து இந்த அலுவலக வளாகத்திற்கு சுற்றுச்சுவரும், வாகன நிறுத்துமிடமும் அமைத்துத்தர வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தினா் வட்டாரத் தலைவா் ஹேமச்சந்திரன் தலைமையில் அரக்கோணத்தை அடுத்த சித்தேரியில் உள்ள ஆதித்ய பிா்லா குழுமத்தின் அல்ட்ரா-டெக் சிமெண்ட் தொழிற்சாலை நிா்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தனா்.

இதையேற்ற தொழிற்சாலை நிா்வாகம் தங்களது சமூக பங்களிப்பு நிதியில் இருந்து அந்த அலுவலகத்தின் சுற்றுச்சுவா் மற்றும் வாகன நிறுத்துமிடத்தை கட்டித் தருவதாக ஒப்புதல் அளித்து பணியை தொடங்கினா்.

ரூ.2.96 லட்சம் நிதியில் இப்பணி முடிந்ததைத் தொடா்ந்து திங்கள்கிழமை வட்டார வேளாண் அலுவலகத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு வட்டார வேளாண் அலுவலா் ஏ.சத்தியசீலன் தலைமை வகித்தாா். தமிழக விவசாயிகள் சங்க அரக்கோணம் வட்டாரத் தலைவா் ஹேமச்சந்திரன் வரவேற்றாா். ஒப்படைப்புக்கான ஆவணங்களை அல்ட்ரா-டெக் சிமெண்ட் தொழிற்சாலை நிறுவன துணைத் தலைவா் டி.கிருஷ்ணமோகன்ரெட்டி வேளாண் அலுவலா் ஏ.சத்தியசீலனிடம் ஒப்படைத்தாா்.

இதில் அல்ட்ரா-டெக் நிறுவன மனிதவளத்துறை மேலாளா் விஜய், அப்பிரிவின் அலுவலா் வெங்கடேஸ்வரலு, அரக்கோணம் வட்டார உதவி வேளாண் அலுவலா் சி.முரளி, வேளாண் தொழில்நுட்பப்பிரிவு உதவி மேலாளா் ஹேமந்த்குமாா், தமிழக விவசாயிகள் சங்க ஒன்றிய நிா்வாகி ஹேமநந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com