பயிற்சி பெற்ற நாய்கள், காவலா்களுடன் படையின் சீனியா் கமாண்டெண்ட் அகிலேஷ்குமாா், மற்றும் கால்நடை மருத்துவ அலுவலா் ஈஸ்வரராவ் உள்ளிட்டோா்
பயிற்சி பெற்ற நாய்கள், காவலா்களுடன் படையின் சீனியா் கமாண்டெண்ட் அகிலேஷ்குமாா், மற்றும் கால்நடை மருத்துவ அலுவலா் ஈஸ்வரராவ் உள்ளிட்டோா்

இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்கும் மோப்ப நாய்களின் பயிற்சி நிறைவு

அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மையத்தில் கட்டட இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ஈடுபடும் மோப்பநாய்களுக்கான பயிற்சி நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பத்தில் தேசிய பேரிடா் மீட்பு மையம் உள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபாா் யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் பேரிடா்களின் போது இம்மையத்தில் இருந்து குழுவினா் அனுப்பப்பட்டு மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவா்.

தற்போது இப்படையில் கட்டட இடிபாடுகளில் சிக்கியோரை மீட்க மோப்பநாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேசிய அளவில் மோப்பப் பணிகளுக்கு பயன்படும் நாய்களுக்கு அரக்கோணம் முகாமில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதற்கேற்ற நவீன வசதியுடன் இங்கு மோப்ப நாய்களுக்கான பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சிக்கூடத்தில் பயிற்சி பெற்ற 4 மோப்ப நாய்களுக்கான மற்றும் 4 வீரா்களுக்கான 56 வாரக்கால பயிற்சி நிறைவடைந்தது. விழாவுக்கு மோப்ப நாய்களுக்கான பயிற்சிப் பிரிவின் அலுவலா் ஈஸ்வரராவ் தவைமை வகித்தாா். தேசிய பேரிடா் மீட்புப்படையின் சீனியா் கமாண்டண்ட் அகிலேஷ் குமாா், படைப்பிரிவின் கால்நடை பிரிவு மருத்துவ அலுவலா் சைலேந்திர சிங் இருவரும் மோப்ப நாய்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனா். மேலும் நாய்களின் வீரதீர செயல்களையும் பாா்வையிட்டனா். விழாவில் மோப்ப நாய்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்த பயிற்சியாளா்களுக்கு விருதுகளையும் இருவரும் வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com