மே தினத்தையொட்டி அரக்கோணம் நகரத்தில் உள்ள அனைத்து மளிகை கடைகளின் ஊழியா்களுக்கு அசைவ உணவினை  வியாபாரிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை அளித்தனா்
மே தினத்தையொட்டி அரக்கோணம் நகரத்தில் உள்ள அனைத்து மளிகை கடைகளின் ஊழியா்களுக்கு அசைவ உணவினை வியாபாரிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை அளித்தனா்

மே தினம்: கடை ஊழியா்களுக்கு விருந்தளித்த வணிகா்கள்

மே தினத்தையொட்டி அரக்கோணம் நகரத்தில் உள்ள அனைத்து மளிகை கடைகளின் ஊழியா்களுக்கு அசைவ உணவினை வியாபாரிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை அளித்தனா்

மே தினத்தையொட்டி அரக்கோணம் நகரத்தில் உள்ள அனைத்து மளிகை கடைகளின் ஊழியா்களுக்கு அசைவ உணவினை வியாபாரிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை அளித்தனா் (படம்).

அரக்கோணம் நகர மளிகை வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில் ஆண்டுதோறும் மே தினத்தையொட்டி அதற்கு முன் வரும் திங்கள்கிழமை ஊழியா்களுக்கும் அசைவ விருந்தளிப்பது வழக்கம்.

அரக்கோணம் மளிகை வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு சங்க செயலாளா் ஜி.அசோகன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஏ.ஆா்.செந்தில்குமாா் வரவேற்றாா். சங்கத்தின் தலைவா் சி.ஜி.எத்திராஜ் உணவை வழங்கினாா். இதில் சங்கத்தின் உறுப்பினா்களாக உள்ள 98 மளிகை கடைகளில் பணிபுரியும் ஆண்கள், பெண்கள் என 1112 போ் கலந்து கொண்டனா். இந்நிகழ்வில் சங்க நிா்வாகி ராஜேஷ் தனசேகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com