அரக்கோணம்: குட்கா விற்ற 5 கடைகளுக்கு ‘சீல் ’
அரக்கோணத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக ஐந்து கடைகளுக்கு காவல் துறையினா் முன்னிலையில் உணவு பாதுகாப்புத் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் அரக்கோணம் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக வருவாய்த் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து பழனிபேட்டையில் ஒரு கடையில் ரூ5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்களை அரக்கோணம் கோட்டாட்சியா் பாத்திமா தலைமையில் வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.
இதை தொடா்ந்து அரக்கோணம் நகரில் புதன்கிழமை ராணிப்பேட்டை மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வாளா் ரவிச்சந்திரன் தலைமையில் காவல் துறையினருடன் இணைந்து சோதனை நடத்தினா். அப்போது குட்கா பொருள்களை விற்ாக அரக்கோணம் பஜாா் தெரு, பழைய பஜாா் தெரு ஆகிய பகுதிகளில் இருந்த 5 கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள், சீல் வைக்கப்பட்டதற்கான உத்தரவையும் கடை உரிமையாளா்களிடம் வழங்கினா்.