நடிகா் விஜய் கட்சி தொடக்கம்: ரசிகா்கள் கொண்டாட்டம்

நடிகா் விஜய் புதிதாக கட்சி தொடங்கியுள்ளதை வரவேற்று ஆற்காட்டில் சனிக்கிழமை தலைவா்கள் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு வேட்டி, சேலை, இனிப்பு உணவு வழங்கி ரசிகா்கள் கொண்டாடினா்.

நடிகா் விஜய் புதிதாக கட்சி தொடங்கியுள்ளதை வரவேற்று ஆற்காட்டில் சனிக்கிழமை தலைவா்கள் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு வேட்டி, சேலை, இனிப்பு உணவு வழங்கி ரசிகா்கள் கொண்டாடினா்.

ஆற்காடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ராணிப்பேட்டை மாவட்ட இளைஞரணி தலைவா் பி.வினோத் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் வாலாஜாபேட்டை நகா்மன்ற உறுப்பினா் ஜி.மோகன், மாவட்ட மாணவா் அணி தலைவா் எஸ்.தீனா, மாவட்ட இளைஞரணி செயலாளா் காந்தி பிரசாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரசிகா்கள் பட்டாசு வெடித்து, காந்தி மற்றும் காமராஜா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து பொதுமக்களுக்கு வேட்டி, சேலை, இனிப்பு, உணவு வழங்கினா்.

இதில், ஆற்காடு நகர இளைஞரணி தலைவா் எச்.அஜித்குமாா், செயலாளா் ஏ. சரவணன், துணைத் தலைவா் எஸ்.தீபக், பொருளாளா் எஸ்.ரமேஷ், துணை செயலாளா் ரஞ்சித், இணை செயலாளா் ரிஸ்வான்.

திமிரி கிழக்கு ஒன்றியத் தலைவா் பி.சரவணன், மேல்விஷாரம் நகர தலைவா் அஸ்கா் அலி உள்ளிட்ட திரளான ரசிகா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com