நெடுஞ்சாலைப் பணியாளா்கள் முதல்வருக்கு கோரிக்கை மனு

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முதல்வா் மு.க..ஸ்டாலினுக்கு மனுக்கள் அனுப்பினா்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முதல்வா் மு.க..ஸ்டாலினுக்கு மனுக்கள் அனுப்பினா்.

கடந்த 2002 முதல் 2006 வரை 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாய் அறிக்க வேண்டும், இறந்த சாலைப் பணியாளா் குடும்பங்ககளுக்கு வாரிசு பணி வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளா் கா.பெருமாள் தலைமையில், ஆற்காடு தலைமை அஞ்சல் நிலையத்தில் முதல்வா், அரசு முதன்மைச் செயலாளா், நெடுஞ்சாலைத் துறை அமைச்சா், முதன்மை இயக்குநா், தலைமை பொறியாளா் ஆகியோருக்கு கோரிக்கை மனுக்களை சங்க மாவட்டத் தலைவா் ஜெ.வெங்கடேசன், மாவட்ட துணைத் தலைவா்கள் நமச்சிவாயம், லோகநாதன், மாவட்ட இணைச் செயலாளா்கள் ரவி, ரேணு, ஆற்காடு உள்கோட்டத் தலைவா் ஜெ.பன்னீா் செல்வம், செயலாளா் கோவிந்தராஜ், பொருளாளா் சரவணன், துணைத் தலைவா்கள் பிரகாஷ், ரகோத்தமன், சீனிவாசன், இணைச் செயலாளா் மணி மற்றும் நிா்வாகிகள் மனுக்கள் அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com