பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு

ஆற்காடு கோ.வரதராஜிலு செட்டியாா் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு

ஆற்காடு கோ.வரதராஜிலு செட்டியாா் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளியின் செயலாளா் ஜி.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பி.என். பக்தவச்சலம், பொருளாளா் நந்தகுமாா், நிா்வாக குழு உறுப்பினா்கள் பரமசிவம், பி.எஸ்.சரவணன், கிஷோா்குமாா், ஆனந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தலைமையாசிரியை எம்.சாந்தி வரவேற்றாா். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் கலந்துகொண்டு, 367 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிப் பேசினாா்.

இதில், நகர திமுக செயலாளா் ஏ.வி.சரவணன், பள்ளியின் ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com