ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 329 மனுக்கள்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 329 பெறப்பட்டன.
ராணிப்பேட்டை குறை தீா் கூட்டத்தில் பெண்ணுக்கு தையல்  இயந்திரம் வழங்கிய  மாவட்ட  ஆட்சியா்  ச.வளா்மதி.
ராணிப்பேட்டை குறை தீா் கூட்டத்தில் பெண்ணுக்கு தையல்  இயந்திரம் வழங்கிய  மாவட்ட  ஆட்சியா்  ச.வளா்மதி.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 329 பெறப்பட்டன.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா்.ச.வளா்மதி தலைமை வகித்து பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா். இதில், பல்வேறு கோரிக்கைகளுடன் 329 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்களை துறை அலுவலா்களிடம் வழங்கி அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிப்புக்கான காரணங்களை மனுதாரா்களுக்கு வழங்கவும் வேண்டுமென அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் ஆற்காடு வட்டம் லாடவரம் பகுதியைச் சாா்ந்த நபருக்கு நெல் அறுவடை இயந்திரம் வாங்க ரூ.25.20 லட்சம் கடன் தொகையில் 30 சதவீதம் இணை மானியம் ரூ.7.56 லட்சம் பெறுவதற்கான ஆணை, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் 14 பேருக்கு தலா ரு.5,500 வீதம் ரூ.77,000 மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்கள், கூட்டத்தில் தையல் இயந்திரம் கோரி மனு அளித்த காவேரிபாக்கத்தைச் சோ்ந்த பெண்ணுக்கு தன் விருப்ப கொடை நிதியிலிருந்து ரூ.7,000 மதிப்பில் மோட்டாா் பொருந்திய தையல் இயந்திரம் ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா்.ந.சுரேஷ், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் .க.லோகநாயகி, சமூக பாதுகாப்புத் திட்ட தனி துணை ஆட்சியா் ஸ்ரீ வள்ளி, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் முரளி, மாவட்ட வழங்கல் அலுவலா் சத்தியபிரசாத், உதவி ஆணையா் (கலால்) வரதராஜ், இளைஞா் நலன் அலுவலா் ஞானசேகரன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலா் ரவிச்சந்திரன், முன்னோடி வங்கி மேலாளா் ஸ்ரீராம்ஜி குமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com