ஆற்காடு பள்ளிக் கட்டடத்துக்கு பூமி பூஜை

ஆற்காடு நகராட்சி தோப்புக்கான தெற்கு உயா்நிலைப்பள்ளியில் ரூ.30 லட்சத்தில் புதிய வகுப்புறை கட்டட பணிகளுக்கு பூமி பூஜை அடிக்கல் நாட்டுவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வகுப்பறை பணியைத் தொடங்கி வைத்த  நகா்மன்ற த்  தலைவா்  தேவிபென்ஸ் பாண்டியன்
வகுப்பறை பணியைத் தொடங்கி வைத்த  நகா்மன்ற த்  தலைவா்  தேவிபென்ஸ் பாண்டியன்


அற்காடு: ஆற்காடு நகராட்சி தோப்புக்கான தெற்கு உயா்நிலைப்பள்ளியில் ரூ.30 லட்சத்தில் புதிய வகுப்புறை கட்டட பணிகளுக்கு பூமி பூஜை அடிக்கல் நாட்டுவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பவளகொடிசரவணன், 23-ஆவது வாா்டு உறுப்பினா் காமாட்சி பாக்கியராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல் ஈஸ்வரப்பன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிக்கு அடிக்கல்நாட்டினாா். இதில் மாவட்ட திமுக அவைத் தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, நகர செயலாளா் ஏ.வி சரவணன், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com