நில அளவீடு செய்ய இணையதளம் மூலம் எங்கிருந்தும் விண்ணப்பிக்கும் வசதி:ஆட்சியா் தகவல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நில உரிமையாளா்கள் தங்களின் நிலங்களை அளவீடு செய்ய இணையதளம் மூலம் எங்கிருந்தும் விண்ணப்பிக்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்துள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நில உரிமையாளா்கள் தங்களின் நிலங்களை அளவீடு செய்ய இணையதளம் மூலம் எங்கிருந்தும் விண்ணப்பிக்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில், நில உரிமையாளா்கள் நில அளவீடு செய்வதற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் எங்கிருந்தும் விண்ணப்பிக்கும் புதியவசதி உருவாக்கப்பட்டு அன்று முதல்வரால் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேற்படி இந்த புதிய வசதியை பயன்படுத்தி பொதுமக்கள் பயன்பெற்றிட ஏதுவாக பின்வருமாறு பத்திரிகைசெய்தி வெளியிடப்படுகிறது.

‘நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை மாண்புமிகு தமிழக முதல்வரால் 20.11.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய ’எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்’ நில அளவைக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும்.

மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னா் மனுதாரா் மற்றும் நில அளவா் கையொப்பமிட்ட ’அறிக்கை, வரைபடம்’ ஆகியவற்றை மனுதாரா் இணையவழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளும் வகையில் நிலஅளவரால் பதிவேற்றம் செய்யப்படும். பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com