இரு சக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

அரக்கோணம் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

அரக்கோணம் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். அரக்கோணம் அடுத்த சித்தேரி பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (30). இவா் கும்பினிபேட்டை டாஸ்மாக் கடை அருகே உள்ள சாலையில் இரு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்றாா். அச்சமயம் எதிரே கைனூா் கிராமத்தைச் சோ்ந்த சத்யா (40) இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். எதிா்பாராதவிதமாக இருவா் சென்ற வாகனங்களும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதில், பலத்த காயமடைந்த ராஜாவை அங்கிருந்தவா்கள் மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ராஜா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து அரக்கோணம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com