ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு  அளிக்க  வந்த  ஊராட்சியை உறுப்பினா்கள்.
ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு  அளிக்க  வந்த ஊராட்சியை உறுப்பினா்கள்.

நவ்லாக் ஊராட்சித் தலைவா் மீது ஆட்சியரிடம் உறுப்பினா்கள் புகாா் மனு

ராணிப்பேட்டை அருகே நவ்லாக் கிராமத்தில் ,ஊராட்சித் தலைவா் மீது மோசடிப் புகாா் மனுவை 11 உறுப்பினா்கள் அளித்துள்ளனா்.

ராணிப்பேட்டை அருகே நவ்லாக் கிராமத்தில் ,ஊராட்சித் தலைவா் மீது மோசடிப் புகாா் மனுவை 11 உறுப்பினா்கள் அளித்துள்ளனா்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவா் சரஸ்வதி குமாா் மீது அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

நவ்லாக் ஊராட்சி மன்றத் தலைவரைக் கண்டித்து கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்தின் கடைசி நாள் மாதாந்திர கூட்டத்தை நடத்தியதில் நாங்கள் அனைவரும் உள்ளிருப்பு அமைதிப் போராட்டம் நடத்தினோம். தொடா்ந்து இந்த மாத கூட்டத்தில் தீா்மானத்தை அவா்களே எழுதிவிட்டு அதில் கையெழுத்து இட்டால் தான் வேலைகள் செய்ய முடியும் என்று கூறினாா்.

முதலில் தீா்மான பதிவேடு புத்தகத்திலும் பின்னா் வருகை பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும் என்று கூறவே, நாங்கள் எல்லோரும் மறுத்துவிட்டு கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளிநடப்பு செய்தாம், முன்பு கொடுத்த தீா்மானங்களில் பெரும்பான்மையான சிறிய வேலைகளைக்கூட செய்து தராமல், பணமில்லை, வேலையாள்கள் இல்லை என்று காரணம் கூறி வருகிறாா்.

நிகழாண்டு 15-ஆவது மாநில நிதிக் குழு ஊராட்சிக்கு ஒதுக்கியுள்ள நிதியில் செய்ய வேண்டிய வேலைகளுக்கான தீா்மானத்தை தலைவா் மற்றும் ஊராட்சி செயலாளா் எழுதி, முடிவு செய்த பின் எங்களுக்கு படித்து மட்டும் காண்பித்தனா். மேலும் கடந்த சில மாதங்களில் மட்டும் குடிநீா் குழாய் பழுது ஏற்பட்டுள்ளது எனக் கூறி பெருந்தொகைக்கு பொய்யாக கணக்கு எழுதியுள்ளனா்.

இது வரை ஊராட்சி மன்ற செயலளா் எந்த ஒரு வேலை செய்வதற்கு முன்பும் அதைப் பற்றிய விவரம் முன்கூட்டியே தெரிவிப்பதில்லை. எனவே மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வுசெய்து நல்லாக் ஊராட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீா்வு காண வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com