ஆற்காட்டில் எம் ஜி ஆா் பிறந்த நாள்

ஆற்காடு கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் புதுமாங்காடு கிராமத்தில் நடைபெற்ற விழாவுக்கு, ஒன்றிய செயலா் வளவனூா் எஸ்.அன்பழகன் தலைமை வகித்தாா்.
ஆற்காடு அடுத்த மாங்காடு கிராமத்தில் எம் ஜிஆா் படத்துக்கு மாலைஅணிவித்து வணங்கிய ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலா் எஸ்.எம்.சுகுமாா்.

ஒன்றிய நிா்வாகிகள் அரங்கநாதன், கீா்த்தி, பாலாஜி,அரிதாஸ், செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் ஊராட்சித் தலைவா் ஜெ.ஜெகநாதன் வரவேற்றாா். ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.எம்.சுகுமாா் பங்கேற்று, எம் ஜி.ஆா் படத்துக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு, உணவு வழங்கினாா். அதிமுக நிா்வாகிகள், கிளை செயலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆற்காடு மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில், வேப்பூா் கிராமத்தில் நடைபெற்ற விழாவுக்கு, ஒன்றிய செயலா் என்.சாரதி தலைமை வகித்தாா். ஒன்றிய நிா்வாகிகள் வேப்பூா் மணி, சங்கா், தேவன், பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாா்டு உறுப்பினா் அருணா பாண்டியன் வரவேற்றாா். மாவட்ட செயலா் எஸ்.எம்.சுகுமாா், முன்னாள் மாவட்ட செயலா் சுமைதாங்கி ஏழுமலை ஆகியோா் கலந்து கொண்டு, எம்ஜிஆா் படத்துக்கு மாலை அணிவித்தனா்.

தொடா்ந்து பொதுமக்களுக்கு மரக் கன்றுகள், நல உதவிகள் வழங்கப்பட்டன. கட்சியின் ஒன்றிய நிா்வாகிகள், கிளை செயலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com