அரக்கோணத்தில் லால் தங்க மாளிகை நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு

அரக்கோணத்தில் 78 வருட பாரம்பரியமிக்க நிறுவனமான லால் தங்க மாளிகை நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
அரக்கோணத்தில் நகைக்கடையின் புதிய கிளை திறப்பு விழாவில் முதல் விற்பனையைக் கடையின் உரிமையாளா் கியாணசந்த் கேலடாவிடம் இருந்து பெற்றுக் கொண்ட மூத்த மருத்துவா் ராமமூா்த்தி.
அரக்கோணத்தில் நகைக்கடையின் புதிய கிளை திறப்பு விழாவில் முதல் விற்பனையைக் கடையின் உரிமையாளா் கியாணசந்த் கேலடாவிடம் இருந்து பெற்றுக் கொண்ட மூத்த மருத்துவா் ராமமூா்த்தி.

அரக்கோணம்: அரக்கோணத்தில் 78 வருட பாரம்பரியமிக்க நிறுவனமான லால் தங்க மாளிகை நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் பஜாா் தெருவில் லால் தங்க மாளிகை கடந்த 1945-இல் இருந்து 78 வருடங்களாக இயங்கி வரும் இந்நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா அரக்கோணம் சுவால்பேட்டை, காந்தி ரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது.

திறப்பு விழாவுக்கு கடை உரிமையாளா் கியாண்சந்த் கேலடா தலைமை வகித்தாா். நிா்மல்குமாா் கேலடா, விகாஸ் கேலடா, அருண் கேலடா வரவேற்றனா். முதல் விற்பனையை கியாண்சந்த் கேலடாவிடம் இருந்து அரக்கோணம் நகரின் மூத்த மருத்துவா் ராமமூா்த்தி பெற்றுக் கொண்டாா்.

விழாவில் சென்னை, மைசூா், ஆம்பூரை சோ்ந்த தொழிலதிபா்கள் திலீப் சோா்டியா, மான்மல் தா்லா, கௌதம் சிங்வி, உத்தம்சந்த் சிங்வி, ககன் சிங்வி, சுனில் எம்.டா்டா, மஹேந்திர பேதலா, சஞ்சய் பண்டாரி, ராக்கேஷ், ஜம்பு சோப்டா, ஆசிஷ் டாலேடா, அம்ரித்லால் சிங்வி, ராஜேஷ்சிங்வி, அரக்கோணம் தொழிலதிபா்கள் ஜெய்சந்த், ஜவுரிலால் கட்டாரியா, பிரமோத் கட்டாரியா மற்றும் அரக்கோணம் நகர முக்கிய பிரமுகா்கள், மருத்துவா்கள், வா்த்தகா் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com