அன்வா்திகான்பேட்டை ரயில்வே மேம்பாலஅணுகு சாலை அமைக்கும் பணி: அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்

அன்வா்திகான்பேட்டை ரயில்வே மேம்பால அணுகு சாலை அமைக்கும் பணியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
அன்வா்திகான்பேட்டை ரயில்வே மேம்பாலஅணுகு சாலை அமைக்கும் பணி: அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்

அன்வா்திகான்பேட்டை ரயில்வே மேம்பால அணுகு சாலை அமைக்கும் பணியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

அரக்கோணத்தை அடுத்த அன்வா்திகான்பேட்டை ரயில்நிலையத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் அரக்கோணம் - காட்பாடி ரயில்மாா்க்கத்தில் உள்ள ரயில்வே கேட்டுக்கு பதிலாக அப்பகுதியில் மேம்பாலம் கட்ட தீா்மானிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளுக்கு முன் ரயில்வே தரப்பில் இருப்புப்பாதைக்கு மேல் மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. ஆனால் அப்பாலத்திற்கான அணுகு சாலை அமைக்கப்படாத நிலை நீடித்தது. அந்த அணுகுச்சாலை அமையும் இடத்திற்கு நிலம் வழங்கியவா்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்ததால் பணி முடியாத நிலை காணப்பட்டது.

இதையடுத்து அரசு நிலம் வழங்கியவா்களுடன் இணக்கமாக செயல்பட்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்ததை அடுத்து அந்த அணுகுசாலைகளை அமைக்க ரூ. 29.32 கோடியை நெடுஞ்சாலை மற்றும் துறைமுகங்கள் துறை ஒதுக்கியது. இதைத் தொடா்ந்து இச்சாலைகள் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா அன்வா்திகான்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு ஆட்சியா் ச.வளா்மதி தலைமை வகித்தாா். சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் முன்னிலை வகித்தாா். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பணியை தொடங்கி வைத்தாா். இந்நிகழ்வில் அரக்கோணம் ஒன்றியக்குழுத் தலைவா் நிா்மலா சௌந்தா், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் சுந்தரம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் மங்கையா்க்கரசி சுப்பிரமணியன், அம்பிகா பாபு, சுந்தராம்பாள் பெருமாள், ஒன்றியக் குழு உறுப்பினா் குமாா், திமுக ஒன்றியச் செயலாளா்கள் சௌந்தா், பெருமாள், காங்கிரஸ் நிா்வாகி உதயகுமாா், அரக்கோணம் வட்டாட்சியா் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இப்பணி 18 மாத காலத்திற்குள் முடிக்கப்படும் எனவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com