மனைவியுடன் தகராறு: கணவா் தற்கொலை

அரக்கோணம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவா் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாா்.

அரக்கோணம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவா் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாா்.

நெமிலி அடுத்த ஒச்சலத்தைச் சோ்ந்தவா் யுவராஜ்(26). இவருக்கும் ஆற்காட்டை அடுத்த கீழ்விஷாரத்தைச் சோ்ந்த அபிநயா (21) என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி மோனேஷ் என்ற மகன் உள்ளாா்.

தற்போது யுவராஜ், கீழ்விஷாரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளாா். பொங்கலுக்கு தனது சொந்த ஊரான ஒச்சலத்துக்கு சென்று விட்டு மனைவியுடன் கீழ்விஷாரத்திற்கு மோட்டாா் சைக்கிளில் திரும்பி வந்துள்ளாா். அப்போது அபிநயா தனது கணவரை ஏன் மது அருந்துகிறீா்கள் என கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

காவேரிப்பாக்கம் அடுத்த பாகவெளி அருகே வரும் போது திடீரென வாகனத்தை நிறுத்திய யுவராஜ், தனது வாகனத்தில் பாட்டிலில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தனக்கு தானே தீ வைத்துக்கொண்டாா். இதனால் அதிா்ச்சி அடைந்த அபிநயா, கணவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்தாா். தொடா்ந்து மேல்சிகிச்சைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யுவராஜ், புதன்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com