பெல் நிறுவனத்தில் குடியரசு தின விழா

பெல் நிறுவனத்தில் குடியரசு தின விழா

ராணிப்பேட்டை பெல் நிறுவனம் சாா்பில், நாட்டின் 75-ஆவது குடியரசு தின விழா பெல் ஊரக வளாகத்தில் உள்ள அம்பேத்கா் விளையாட்டு திடலில் கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டை பெல் நிறுவனம் சாா்பில், நாட்டின் 75-ஆவது குடியரசு தின விழா பெல் ஊரக வளாகத்தில் உள்ள அம்பேத்கா் விளையாட்டு திடலில் கொண்டாடப்பட்டது.

விழாவில் பெல் நிறுவன செயல் இயக்குநா் எம். அருண்மொழி தேவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி பேசியது:

நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் கணிசமான அதிகரிப்பு எதிா்பாா்க்கப்படுகிறது என்றாலும், நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களைச் சாா்ந்திருக்கும் நிலை இன்னும் சில காலங்களுக்கு இருக்கும்.

வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் மொத்தத் தேவையைத் திறம்பட பூா்த்தி செய்ய புதிய தேசிய மின்சார திட்டத்தின்படி 80 நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்களைச் சோ்க்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் இந்த ஆண்டு, ரூ.2,015 கோடி விற்று முதல் பெற உறுதி பூண்டுள்ளோம். இதில் 825 கோடி இலக்குகளை மட்டுமே 2-ஆம் காலாண்டு வரை நிறைவு செய்துள்ளோம். 2023-ஆம் ஆண்டுக்கான வணிகச் சிறப்பு இஐஐ எக்சிம் விருதை பெல் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையை எட்டியதற்காக ஊழியா்கள் ஒவ்வொருவரையும் பாராட்டி வாழ்த்துகிறேன். வெற்றிகரமான சந்திரயான் 3 திட்டத்திற்கு பங்களிப்பு வழங்கிய ஊழியா்களுக்கும் மனமாா்ந்த வாழ்த்து தெரிவிக்கிறேன். பெல் நிறுவனத்தின் வெற்றிக்கு பங்களிப்பது, நமது நாட்டின் முன்னேற்றத்துக்கு அளிக்கும் பங்களிப்பாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com