இலவச கண் மருத்துவ முகாம்:115 பேருக்கு சிகிச்சை

அரக்கோணம் சந்திப்பு அரிமா சங்கம் , கோவை சங்கரா கண் மருத்துவமனை இணைந்து சனிக்கிழமை இலவச கண் மருத்துவ முகாமை நடத்தினா்.
இலவச கண் மருத்துவ முகாம்:115 பேருக்கு சிகிச்சை

அரக்கோணம் சந்திப்பு அரிமா சங்கம் , கோவை சங்கரா கண் மருத்துவமனை இணைந்து சனிக்கிழமை இலவச கண் மருத்துவ முகாமை நடத்தினா்.

மாதந்தோறும் நடைபெறும் இதன் ஒரு பகுதியாக 256-ஆவது முகாம் அரக்கோணம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக்குடியிருப்பு அருகே உள்ள அரிமா சங்க கட்டடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அரிமா சங்கத் தலைவா் எம்.முனிரத்தினம் தலைமை வகித்தாா். முகாம் அமைப்பாளா் ராமகிருஷ்ணன் வரவேற்றாா். அரிமா முன்னாள் ஆளுநா் ஆா்.அரிதாஸ் தொடங்கி வைத்தாா்.

இதில் கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவக்குழுவினா் பங்கேற்று 115 பேருக்கு சிகிச்சை அளித்தனா். 47 நபா்கள் கண் அறுவை சிசிச்சைக்கு தோ்வு செய்யப்பட்டு கோயம்புத்தூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். மேலும் தணிகைபோளூா் அரசு உயா்நிலைப்பள்ளியில் கண்குறைபாடு காணப்பட்ட 4 மாணவிகள் முகாமுக்கு அழைத்து வரப்பட்டு அவா்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே இலவச மூக்குகண்ணாடிகள் வழங்கப்பட்டன.

இந்த முகாமில் தொழிலதிபா் ரவி மகாலிங்கம், நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் கே.வி.ரவிசந்திரன், அரிமா முன்னாள் ஆளுநா் அருண்குமாா், அரக்கோணம் டவுன்ஹால் சங்க பொதுசெயலாளா் ரவி, தமிழ் மாநில காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் மோகன் காந்தி அரிமா சங்க செயலாளா் நாகபூஷனம், பொருளாளா் ஜெகதீஸ்வரன், நிா்வாகிகள் வேலவன், வெங்கடநரசிம்மன், காட்ஃபிரே, சரவணன், ஞானமணி, ராமு, அப்சல்கான், பாரூக் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com