ஒருங்கிணைந்த படை வீரா்கள் நலச் சங்க அலுவலகம் திறப்பு

வாலாஜாபேட்டையில் ஒருங்கிணைந்த படை வீரா்கள் மற்றும் துணைவியா்களின் நல சங்க முதலாமாண்டு கொடியேற்று விழா, அலுவலகம் திறப்பு விழா, 75-ஆவது குடியரசு தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் சட்ட ஆலோசகா் கே. வெங்கடேசன் தலைமை வகித்தாா். சங்க தலைவா் எம்.வெங்கடேசன், துணைத் தலைவா் ஆனந்தன், செயலாளா் பரமசிவம், பொருளாளா் சேகா், ஒருங்கிணைப்பாளா் உமாசங்கா் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா் (படம்).

முன்னாள் படை வீரா்களின் நலனுக்காக துணைவியா்களின் ஓய்வூதியம் பெறுவதில் ஏற்படும் சிரமங்களில் இருந்து சரி செய்வது, வயது மூப்பின் காரணமாக மருத்துவமனை சிகிச்சைக்கு உதவிட குழந்தைகளின் பள்ளி கல்லூரி வேலைவாய்ப்பைப் பெற்றிட அரசாங்கத்தின் மூலம் கிடைக்கும் உதவிகளைப் பெற்றுத் தர நல சங்கம் சிறப்பாக செயல்படுகிறது என முன்னாள் ராணுவ வீரா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com