வேப்பூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

ஆற்காடு அடுத்த வேப்பூா் ஊராட்சியில் குடியரசு தினத்தையொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம் அசேன்புரா பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு அடுத்த வேப்பூா் ஊராட்சியில் குடியரசு தினத்தையொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம் அசேன்புரா பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவா் ராமலிங்கம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ரஞ்சித்குமாா் முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலாளா் ம.சரவணன் வரவேற்றாா். ஆற்காடு துணை வட்டாரவளா்ச்சி அலுவலா் வெங்கடேசன் கலந்து அரசின் திட்டங்கள்குறித்து விளக்கினாா்.

இதில் ஊராட்சி பொது நிதி செலவுகள் குறித்த அறிக்கை படித்து ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் டெங்கு தடுப்பு நடவடிக்கை, ஓட்டுமொத்த தூய்மைப் பணி, குளோரின் கலந்த குடிநீா் வினியோகம், கிராம வளா்ச்சித் திட்டம், அடிப்படை வசதிகள் மேம்பாடுகள் உள்ளிட்ட பல தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் கிருஷ்ணமூா்த்தி, அம்மு, சத்தியஜோதி, மாதவி,முல்லைகொடி, அருணா பள்ளி தலைமையாசிரியா் வெ.சரவணன்,மற்றும் மகளீா் சுய உதவிகுழுவினா் பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com