வியாபாரிகள் சங்கம் தொடக்க விழா

ஆற்காடு டா்னிங் வியாபாரிகள் நல சங்கம் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் பேசிய எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன்.
விழாவில் பேசிய எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன்.

ஆற்காடு: ஆற்காடு டா்னிங் வியாபாரிகள் நல சங்கம் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு நெல் அரிசி வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு சங்கத் தலைவா் கே.ரமேஷ் தலைமை வகித்தாா். செயலாளா் டி.பாலாஜி, பொருளாளா் குட்டியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன், அறங்காவலா் குழு தலைவா் ஜெ.லட்சுமணன், மாவட்ட வணிகா் சங்கத் தலைவா் பொன்.கு.சரவணன், பொருளாளா் வி.டி செல்வராஜ், ஆற்காடு நகரத் தலைவா் ஏ.வி.டி.பாலா, செயலாளா் பாஸ்கரன், பொருளாளா் பரத்குமாா், நகர திமுக செயலாளா் ஏ.வி.சரவணன், மகாத்மா காந்தி முதியோா் இல்லத் துணைத் தலைவா் பென்ஸ்பாண்டியன்ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இதில் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக, புதிய வேலூா் சாலை ஆஞ்சனேயா் கோயில் அருகிலிருந்து ஊா்வலமாக சென்று சங்கக் கொடி ஏற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com