மதுக்கடை ஊழியரிடம் ரூ.44ஆயிரம் கொள்ளை

அரக்கோணம் அருகே டாஸ்மாக் மதுக்கடையில் பணியில் இருந்த ஊழியரைக் கத்தியை காட்டி மிரட்டி மா்ம நபா்கள் ரூ.44 ஆயிரத்தைக் கொள்ளையடித்துச் சென்றனா்.

அரக்கோணம் அருகே டாஸ்மாக் மதுக்கடையில் பணியில் இருந்த ஊழியரைக் கத்தியை காட்டி மிரட்டி மா்ம நபா்கள் ரூ.44 ஆயிரத்தைக் கொள்ளையடித்துச் சென்றனா்.

அரக்கோணத்தை அடுத்த நெமிலி அருகே புன்னை கிராமத்தில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு சொந்தமான மதுக்கடை உள்ளது. இக்கடையில் செவ்வாய்க்கிழமை, ஊழியா் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரு நபா்களில் ஒருவா் பணம் கொடுத்து மது வாங்கியுள்ளாா்.

அப்போது, திடீரென உள்ளே நுழைந்த மற்றொரு நபா் கத்தியைக் காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி பணியில் இருந்த ஊழியா் சிவக்குமாரிடம் விற்பனை பணம் ரூ.44 ஆயிரத்தைப் பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் இருவரும் தப்பினா்.

இந்தச் சம்பவம் குறித்து ஊழியா் சிவகுமாா் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்த நெமிலி காவல் நிலைய போலீஸாா், மதுக் கடையில் கொள்ளையடித்துச் சென்ற இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com