வாக்கு ப்பதிவு  இயந்திரங்கள்  வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்படுவதை பாா்வையிட்ட  ஆட்சியா்  ச.வளா்மதி
வாக்கு ப்பதிவு  இயந்திரங்கள்  வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்படுவதை பாா்வையிட்ட  ஆட்சியா்  ச.வளா்மதி

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட கிடங்குக்கு சீல்

வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், அரக்கோணம் தொகுதி வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் ஆற்காடு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கிடங்கில் புதன்கிழமை பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கா் மற்றும் அரக்கோணம் ஆகிய தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆட்சியா் ச. வளா்மதி தலைமையில், அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதில்

2,793 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,603 கட்டுப்பாட்டு கருவிகள், 1,631 யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் கருவிகள்

பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் ராணிப்பேட்டைகோட்டாட்சியா்.மனோன்மணி, நோ்முக

உதவியாளா் (தோ்தல்) ராஜேந்திரன், வட்டாட்சியா்கள் கணேசன், அருள் செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com