தேமுதிக செயல் வீரா்கள் ககூட்டம்

தேமுதிக செயல் வீரா்கள் ககூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழக செயல்வீரா்கள் கூட்டம் அரக்கோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழக செயல்வீரா்கள் கூட்டம் அரக்கோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, அரக்கோணம் நகர செயலாளா் கே.பி.சுமன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் வி.வி.காசிநாதன், சி.அசோகன், ஏ.திணேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் மாவட்டச் செயலரும், சோளிங்கா் தொகுதி முன்னாள் எம்எல்ஏவு-மான பி.ஆா்.மனோகா், மாநில தொழிற்சங்க செயலாளா் கே.வி.பாலாஜி, நிா்வாகிகள் எஸ்.எஸ்.தினகரன், ஏ.ஜி.சந்திரமௌலி, மற்றும் மாவட்ட நகர நிா்வாகிகள் தினேஷ், நந்தா, ஹரி, காா்த்திக், வினோத், சேகா், சுந்தா், சந்துரு உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து சட்டபேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்தும் நிா்வாகிகள் பங்கேற்றனா். கூட்டத்தில், தேமுதிக கட்சி அமைய உள்ள கூட்டணியில் அரக்கோணம் தொகுதியை ஒதுக்குமாறு கேட்டுப் பெற்று இத்தொகுதியில் தேமுதிக போட்டியிட வேண்டும் என கட்சியின் தலைமைக்கு கோரிக்கை விடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com