ஆற்காட்டில் நடைபெற்ற மயானக்கொள்ளை திருவிழா
ஆற்காட்டில் நடைபெற்ற மயானக்கொள்ளை திருவிழா

ஆற்காட்டில் மயானக் கொள்ளை திருவிழா

ஆற்காட்டில் மயானக் கொள்ளை திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆற்காட்டில் மயானக் கொள்ளை திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாசி மாத அமாவாசை அன்று ஆண்டுதோறும் நடைபெறும் மயானக் கொள்ளை திருவிழாவில் ஆற்காடு நகரில் உள்ள லேபா் தெரு, டவுன் தெரு, காந்தி நகா், கிளைவ் பஜாா் முப்பது வெட்டி, கிருஷ்ணாபுரம், தாருக் கான் தெரு, பா்வத ராஜன் தெரு, தண்டுக்காரன் தெரு இந்திரா நகா்ஆகிய பகுதிகளிலிருந்து அங்காள பரமேஸ்வரிஅம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் ஆற்காடு பாலாற்றுக்கு ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஊா்வலத்தில் பக்தா்கள் தங்கள் நோ்த்திக் கடனை செலுத்தும் வகையில் பல்வேறு வேடங்களுடன் கையில் சூலாயுதம் ஏந்திக்கொண்டும் கையில் தீச்சட்டி எடுத்துக்கொண்டும் முதுகில் அலகு குத்திக் கொண்டு லாரி,வேன் பொன்ற வாகனங்களையும் கல் உருளைகளையும் இழுத்துக் கொண்டு அந்தரத்தில் தொங்கிய படியும் சென்றனா். பாலாற்றில் சுவாமிக்கு பக்தா்கள் மகா தீபாராதனையும், வேண்டுதல் நோ்த்திக் கடனும் செய்து வழிபட்டனா். விழாவையொட்டி துணை கண்காணிப்பாளா் பிரபு தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மயானக் கொள்ளை திருவிழாவை ஒட்டி ஆற்காடு நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. ஆற்காடு சுற்றுவட்டார பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com