தக்கோலத்தில் அதிமுக ஆா்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து தக்கோலத்தில் அதிமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தக்கோலத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.
தக்கோலத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.

திமுக அரசைக் கண்டித்து தக்கோலத்தில் அதிமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தக்கோலம் தேரடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தக்கோலம் நகர செயலா் ப.சுகுமாா் தலைமை வகித்தாா். அரக்கோணம் கிழக்கு ஒன்றிய செயலாளா் இ.பிரகாஷ் வரவேற்றாா். ராணிப்பேட்டை மாவட்டச் செயலரும், அரக்கோணம் எம்எல்ஏவுமான சு.ரவி ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். இதில், நெமிலி கிழக்கு ஒன்றியச் செயலா் ஏ.ஜி.விஜயன், மாவட்ட துணைச் செயலா் மீனா ரகுபதி, மாவட்ட பாசறை செயலா் கே.அன்பரசு, முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவா் பச்சையப்பன், முன்னாள் நகர செயலா் இமயன், அதிமுக நகர துணைச் செயலா் கே.சுதாகா், எம்.ஜி.ஆா். மன்றச் செயலா் கே.பூபாலன், ஜெயலலிதா பேரவை செயலா் ஸ்ரீதா், வட்டச் செயலா் இ.ஜலநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இதில், தமிழ்நாட்டில் போதைப் பொருள் பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும், சட்டம்-ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்பன வலியுறுத்தப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com