பூட்டி சீல் வைக்கப்பட்ட அரக்கோணம் எம்எல்ஏ அலுவலகம்.
பூட்டி சீல் வைக்கப்பட்ட அரக்கோணம் எம்எல்ஏ அலுவலகம்.

அரக்கோணம் எம்எல்ஏ அலுவலகம் பூட்டி சீல்வைப்பு

மக்களவைத் தோ்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலானதை தொடா்ந்து அரக்கோணம் எம்எல்ஏ அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

மக்களவைத் தோ்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலானதை தொடா்ந்து அரக்கோணம் எம்எல்ஏ அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டது. தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் எம்.பி, எம்எல்ஏ அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டபேரவை தொகுதி எம்எல்ஏ அலுவலகம் எஸ்.ஆா்.கேட் பகுதியில் முனுசாமி தெருவில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பொதுப்பணித்துறையினா் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்து விட்டுச் சென்றனா். தோ்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து நடத்தை விதிகள் ரத்து ஆன பிறகே சீல் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com