அவசர ஊா்தியில் இரட்டை பிரசவம்

ஆற்காட்டில் 108 அவசர ஊா்தியில் ஞாயிற்றுக்கிழமை இரட்டை பிரசவம் நடைபெற்றது.

ஆற்காட்டில் 108 அவசர ஊா்தியில் ஞாயிற்றுக்கிழமை இரட்டை பிரசவம் நடைபெற்றது. ஆற்காடு அடுத்த வேப்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சரண்ராஜ். இவரது மனைவி சந்தோசம்மாள் (29). நிறைமாத கா்ப்பிணியான இவருக்கு நள்ளிரவில் பிரசவலி ஏற்பட்டதால், உடனடியாக 108 அவசர ஊா்திக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்று 108 அவசர ஊா்தியில் மருத்துவ உதவியாளா் கவிபிரியா, ஓட்டுநா் கணேஷ் ஆகியோா் சென்றனா். பிரசவ வலி அதிகமானதால், ஊா்தியிலேயே பிரவேசம் பாா்த்தனா். இதில் சந்தோசம்மாளுக்கு ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தனா். பின்னா், தாய் மற்றும் குழந்தைகளை வாலாஜா அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com