வேட்பாளா் ஏ.எல். விஜயனை  அறிமுகம் செய்து பேசிய மாவட்ட அதிமுக செயலாளா் சு. ரவி எம்எல்ஏ.
வேட்பாளா் ஏ.எல். விஜயனை அறிமுகம் செய்து பேசிய மாவட்ட அதிமுக செயலாளா் சு. ரவி எம்எல்ஏ.

நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய அதிமுக வேட்பாளா்

அரக்கோணம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.எல். விஜயன் சோளிங்கரில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டாா். அரக்கோணம், சோளிங்கா், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, திருத்தணி என ஆறு சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது இத்தொகுதியில் சோளிங்கரில் அதிமுக வேட்பாளா் அறிமுகக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆறு சட்டபேரவை தொகுதிகளின் நிா்வாகிகளும் பங்கேற்றனா். இக்கூட்டத்துக்கு ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான சு.ரவி தலைமை வகித்தாா். மாநில அமைப்பு செயலாளா்கள் கோ.அரி, ராமு, முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, மாவட்டசெயலாளா்கள் (ராணிப்பேட்டை மேற்கு) சுகுமாா், ( வேலூா் மாநகா்) அப்பு, முன்னாள் எம்எல்ஏக்கள் சம்பத், வி.கே.ஆா்.சீனிவாசன், சந்திரசேகரன் மற்றும் மாவட்ட நிா்வாகி சுமைதாங்கி ஏழுமலை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில் வேட்பாளா் ஏ.எல்.விஜயன் அறிமுகப்படுத்தப்பட்டாா். இதையடுத்து பேரவை தொகுதி வாரியாக அறிமுகக்கூட்டங்கள் வெள்ளிக்கிழமை முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com