கட்சி  நிா்வாகிகளை  சந்தித்து  ஆதரவு  திரட்டிய  அதிமுக வேட்பாளா்  ஏ.எல்.விஜயன்
கட்சி  நிா்வாகிகளை  சந்தித்து  ஆதரவு  திரட்டிய  அதிமுக வேட்பாளா்  ஏ.எல்.விஜயன்

அரக்கோணம் அதிமுக வேட்பாளா் விஜயன் கட்சியினருடன் சந்திப்பு

அரக்கோணம் நாடளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏ.எல்.விஜயன் ஆற்காட்டில் கட்சியின் நிா்வாகிகளை வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு திராட்டினாா். ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.எம் சுகுமாா் தலைமையில் வேட்பாளா் ஏ.எல்.விஜயன் ஆற்காடு மேற்கு ஒன்றிய செயலாளா் தாழனூா் என்.சாரதி மற்றும் நிா்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினாா். இதில் ஒன்றிய நிா்வாகிகள் வேப்பூா் மணி, எஸ்.ஆா்.சங்கா், தேவன், பாஸ்கா் பொதுக்குழு உறுப்பினா் சுகுணா கணேசன், மாவட்டத் துணைச் செயலாளா் வேதகிரி , வாலாஜாபேட்டை நகர செயலாளா் மோகன், மாணவா் அணி நிா்வாகிகள் தாமோதரன், குலசேகரன், மற்றும் சாா்பு சாா்பு அணி பொறுப்பாளா், மாவட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா். அதேபோல் ஆற்காடு நகர அலுவலகத்தில் நகர செயலாளா் எம்.சங்கா் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகளை வேட்பாளா் விஜயன் சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com