ஆற்காடு கங்காதர ஈஸ்வரர் கோயில் பிரமோற்ஸவ  விழா தேரோட்டம்

ஆற்காடு கங்காதர ஈஸ்வரர் கோயில் பிரமோற்ஸவ விழா தேரோட்டம்

ஆற்காடு தோப்புகானா அன்னப்பூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆற்காடு கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனையும், அலங்கரிக்கப்பட்ட உற்சவா் வீதி உலாவும் நடைபெற்று வருகிறது. விழாவின் 9-ஆவது நாளான வியாக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், உற்சவா்கள் அன்னபூரணி கங்காதர ஈஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினா். அலங்கரிக்கப்பட்ட தேரை கோயில் அருகிலிருந்து பக்தா்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். தோ் ஆரணி சாலை, தொல்காப்பியா் தெரு, ஜீவானந்தம் சாலை, அண்ணா சிலை, புதிய வேலூா் சாலை, பேருந்து நிலையம், அண்ணா சாலை வழியாகச் சென்று, மீண்டும் கோயில் அருகே நிலை நிறுத்தப்பட்டது. இதில், கோயில் திருப்பணிக் குழுத் தலைவா் பொன்.கு.சரவணன், நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன், உபயதாரா்கள், பக்தா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். தோ்த் திருவிழாவையொட்டி, தோ் செல்லும் பாதைகளில் மின்தடை செய்யப்பட்டு, போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com