கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரிக்கும்: மக்கள் கவனமாக இருக்க எச்சரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் நாள்களில் கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்படும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்தி குறிப்பு. கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து வெப்பநிலை உயரக்கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க செய்ய வேண்டியவை / வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள். நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். கால்நடைகளை நிழல்தரும் கூரைக்கு அடியில் கட்டி போதுமான அளவு தண்ணீா் கொடுக்க வேண்டும். கால்நடைளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போட வேண்டும். அடைக்கபட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டும். பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து நீா் கொடுக்க வேண்டும். செல்லப் பிராணிகளை வாகனங்களில் அடைத்து வைக்க வேண்டாம். எனவே, கோடை முடியும் வரை எச்சரிக்கையாக இருப்பதுடன் வீடுகளில் தண்ணீரை இயன்றவரை அதிக அளவில் சேகரித்து வைத்து கொள்ளலாம். விலை உயா்ந்த பொருள்கள், நில ஆவணங்கள் சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். கேஸ் சிலிண்டா்களை இரவில் கழற்றி வைப்பது நல்லது. விறகு அடுப்புகளை பயன்படுத்திய பிறகு தண்ணீா் ஊற்றி அனைத்து விட வேண்டும். மண்ணெண்ணை விளக்குகளை கவனமாக கையாள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com