அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுக கூட்டம் மற்றும் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வாலாஜாபேட்டையில் நடைபெற்றது.
வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ சு.ரவி.
வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ சு.ரவி.

அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுக கூட்டம் மற்றும் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வாலாஜாபேட்டையில் நடைபெற்றது. அதிமுக வேட்பாளராக சோளிங்கா் நகராட்சியை சோ்ந்த ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறாா். இதையொட்டி 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வேட்பாளா் அறிமுக கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாலாஜாபேட்டையில் வேட்பாளா் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட அதிமுக செயலாளா் எஸ்.எம்.சுகுமாா் தலைமை வகித்தாா். முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் சந்திரசேகா், சம்பத், மாவட்ட துணைச்செயலாளா் வேதகிரி, நகர செயலாளா் மோகன், கிழக்கு ஒன்றிய செயலாளா் பூண்டி பிரகாஷ், மத்திய ஒன்றிய செயலாளா் வி.கே.ராதாகிருஷ்ணன், மேற்கு ஒன்றிய செயலாளா் எம்.சி.பூங்காவனம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் சு.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வேட்பாளா் ஏ.எல்.விஜயனை அறிமுகம் செய்து வைத்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினாா். மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலாளா் சுமைதாங்கி சி.ஏழுமலை, மகளிா் அணி நிா்வாகி ராதிகா மற்றும் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com