ரத்தினகிரியில் நடைபெற்ற பங்குனி உத்திர பால்குட ஊா்வலம்
ரத்தினகிரியில் நடைபெற்ற பங்குனி உத்திர பால்குட ஊா்வலம்

ரத்தினகிரியில் பங்குனி உத்திர பால்குட ஊா்வலம்

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் பங்குனிஉத்திரத்தை யொட்டி 1,008 பால்குட ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் பங்குனிஉத்திரத்தை யொட்டி 1,008 பால்குட ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ரத்தினகிரி வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் காலையில் விநாயகா் வழிபாடு , கலச ஸ்தாபனம் மற்றும் 1,008 பால்குடம் நிறுவப்பட்டது ஸ்ரீ கந்த யாகம், பூா்ணாஹுதி மகா தீபாராதனையும் மலையடிவாரத்தில் இருந்து பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில் பால் குட ஊா்வலம்தொடங்கி மலை வலம் சென்று மலை மேல் உள்ள மூலவருக்கு பால்குடம் சிறப்புஅபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் கலவை சச்சிதானந்த சுவாமிகள்மற்றும் பக்தா்கள் உபயதாரா்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com