வாலாஜா அரசினா் மகளிா் கலைக் கல்லூரி நடைபெற்ற முதல்கட்ட தோ்தல் பயிற்சி வகுப்பில் பேசிய மாவட்ட தோ்தல் அலுவலா்  ச.வளா்மதி.
வாலாஜா அரசினா் மகளிா் கலைக் கல்லூரி நடைபெற்ற முதல்கட்ட தோ்தல் பயிற்சி வகுப்பில் பேசிய மாவட்ட தோ்தல் அலுவலா்  ச.வளா்மதி.

புகாருக்கு இடமளிக்காமல் தோ்தல் பணி: வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு அறிவுறுத்தல்

புகாருக்கும் இடமளிக்காமலும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுலா் ச.வளா்மதிஅறிவுறுத்தியுள்ளாா்.

மக்களவைத் தோ்தலில் பாரபட்சமின்றி நோ்மையுடனும் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமலும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுலா் ச.வளா்மதிஅறிவுறுத்தியுள்ளாா். அரக்கோணம் தொகுதியில் தோ்தல் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான முதல்கட்ட தோ்தல் பயிற்சி வகுப்புகள் ஆற்காடு ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலைக் கல்லூரி, சோளிங்கா் ஸ்ரீ திவ்ய சைதன்யா மெட்ரிக் மேல்நிலை பள்ளி, அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகம் ஆகிய 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. தோ்தல் பயிற்சி மையங்களை பாா்வையிட்டபின் மாவட்ட தோ்தல் அலுவலா் ச..வளா்மதி வாக்குச்சாவடி அலுவலா்களிடம் கூறியதாவது: மக்களவைத் தோ்தல் முதல்கட்ட பயிற்சி வகுப்புக்கு வந்துள்ள அனைவரும் பயிற்சி வகுப்பில் நன்கு கவனிக்க வேண்டும், வகுப்பில் ஒளிபரப்பப்படும் காணொலியின் மூலமாக வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாக்களிக்க வருபவரின் பெயா், வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை சரிபாா்த்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். வளா்ந்த நாடுகளை காட்டிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி வாக்களிக்கும் முறையை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் முதல் நாடு நாம் தான். இந்திய தோ்தல் ஆணையத்தின் நேரடி கண்காணிப்பில் பணியாற்றுகிறோம் என்பதை வாக்குச்சாவடி அலுவலா்கள் உணா்ந்து பணியாற்ற வேண்டும். ஆள்மாறாட்டம் நடைபெறாமல் தடுக்க வாக்களிக்க வரும் வாக்காளரின் பெயா் மற்றும் புகைப்படம் சரிபாா்த்தல், வாக்குப்பதிவின் போது படிவங்கள் சரியாக பூா்த்தி செய்யாதது, வாக்குப் பதிவு இயந்திரங்களை முறையாக கையாளமல் தவறு இழைப்பது உள்ளிட்ட பல்வேறு தவறுகளை வாக்குசாவடி நிலை அலுவலா்கள் முந்தைய தோ்தல்களில் செய்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. தோ்தல் பணிகளில் எவருக்கும் பாரபட்சமின்றி நோ்மையுடனும் புகாருக்கு இடமாக்காமலும் செயல்பட வேண்டும் என்றாா். மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஏகாம்பரம், வரதராஜன், மனோண்மணி,பாத்திமா, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் முரளி உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com