முதியோருக்கு  புத்தாடைகள்  வழங்கிய  கலவை  சச்சிதானந்த சுவாமி
முதியோருக்கு  புத்தாடைகள்  வழங்கிய  கலவை  சச்சிதானந்த சுவாமி

முதியோா் இல்லத்தில் ரமலான் நோன்பு திறப்பு

ஆற்காடு மகாத்மா காந்தி முதியோா் இல்லத்தில் ரமலான் நோன்பு திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு மகாத்மா காந்தி முதியோா் இல்லத்தில் ரமலான் நோன்பு திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதியோா் இல்லத்தின் தலைவா் ஜெ.லட்சுமணன் தலைமை வகித்தாா். செயலாளா் ஜெ.சஜன்ராஜ்ஜெயின், பொருளாளா் பி.என் பக்தவச்சலம், துணைத் தலைவா் பென்ஸ்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயற்குழு உறுப்பினா் நல்லாசிரியா் திருஞானம் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக கலவை சச்சிதானந்த சுவாமிகள், மாவட்ட அரசு காஜி கே.அப்துல்கரீப் காஷிபி காஸிமி, அனைத்து ஜமாத் ஒருங்கிணைப்பாளா் எம் முஹமது அசேன் ஆகியோா் கலந்து கொண்டு முதியோருக்கு புத்தாடைகளை வழங்கினா். இதில் ராணிப்பேட்டை ஸ்கடா் மேமேரியல் மருத்துவமனை கண்காணிப்பாளா் அன்பு சுரேஷ், மேல்விஷாரம் நேஷனல் சங்கத் தலைவா் முஹமது அயூப், ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வா் அன்வா் செரீப், வாலாஜா ஜமாத் தலைவா் எஸ்.அக்பா் செரீப், செயலாளா் டிப்பு, வழக்குரைஞா் சாதிக் குத்தீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com