அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.எல்.விஜயன் சொத்து விவரம்

அரக்கோணம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.எல்.விஜயன் சொத்து விவரங்கள் தாக்கல் செய்துள்ளாா்.

அதன்படி, அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் ஏ.எல்.விஜயனின் வங்கிக் கணக்கில் உள்ள ரொக்கம் ரூ. 1 லட்சத்து, 54 ஆயிரத்து, 440 ஆகவும், அசையும் சொத்தாக ரூ. 3 கோடியே, 61 லட்சத்து, 30 ஆயிரத்து, 720 ஆகவும், அசையா சொத்தாக ரூ. 2 கோடியே, 12 லட்சத்து, 30 ஆயிரம் ஆகவும், கடன் ரூ. 4 கோடியே 82 லட்சத்து, 16 ஆயிரமாகவும் உள்ளது.

அவரது மனைவி கவிதாவின் வங்கிக் கணக்கில் ரொக்கம் ரூ. 1லட்சத்து, 12 ஆயிரத்து 500- ஆக உள்ளது. மேலும், அவரது பெயரில் உள்ள அசையா சொத்து ரூ. 1 கோடியே 97 லட்சமாகவும், அசையும் சொத்து ரூ. 4 கோடியே 20 லட்சத்து, 39 ஆயிரத்து 478 ஆகவும், மேலும் அவரது பெயரில் கடன் தொகை ரூ. 5 கோடியே 16 லட்சமாகவும் உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com