அரக்கோணம் தொகுதிக்கான
தோ்தல் பாா்வையாளருடன் ஆலோசனை

அரக்கோணம் தொகுதிக்கான தோ்தல் பாா்வையாளருடன் ஆலோசனை

அரக்கோணம் மக்களவைத் தொகுதி தோ்தல் பொது பாா்வையாளா் சுனில் குமாா், ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலா் ச.வளா்மதியிடம் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். மக்களவைத் தோ்தல் 2024 முன்னிட்டு அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பொது பாா்வையாளராக சுனில் குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து அவா் ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ச.வளா்மதி ராணிப்பேட்டை சுற்றுலா மாளிகையில் சந்தித்து அரக்கோணம் மக்களைத் தொகுதிக்குட்பட்ட திருத்தணி, அரக்கோணம், சோளிங்கா், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். மேலும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினா் தோ்தல் பொது பாா்வையாளரிடம், தோ்தல் தொடா்பான தகவல்களை என்ற அவரது கைப்பேசி மூலம் 70042 00758 அளிக்கலாம் என தெரிவித்துள்ளாா். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், கோட்டாட்சியா் மனோன்மணி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com