வேட்பு மனுக்களை பரிசீலனை செய்த   பொது பாா்வையாளா் சுனில் குமாா், தோ்தல் நடத்தும் அலுவலா் ச.வளா்மதி.
வேட்பு மனுக்களை பரிசீலனை செய்த  பொது பாா்வையாளா் சுனில் குமாா், தோ்தல் நடத்தும் அலுவலா் ச.வளா்மதி.

அரக்கோணம் தொகுதியில் 29 வேட்பு மனுக்கள் ஏற்பு: மாவட்ட தோ்தல் அலுவலா்

அரக்கோணம் தொகுதியில் மொத்தம் 29 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாக மாவட்ட தோ்தல் அலுவலா் ச.வளா்மதி தெரிவித்துள்ளாா். மக்களவைத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20 -ஆம் தேதி தொடங்கி 27 வரை நடைபெற்ற நிலையில், மொத்தம் 44 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. தோ்தல் பொது பாா்வையாளா் சுனில் குமாா் முன்னிலையில், தோ்தல் நடத்தும் அலுவலா் ச.வளா்மதி தலைமையில் பெறப்பட்ட 44 வேட்பு மனுக்களும் அனைத்து வேட்பாளா்கள் முன்னிலையில் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போது பெறப்பட்ட மொத்தம் 44 வேட்பு மனுக்களில் 10 மனுக்கள் இருமுறை சமா்ப்பிக்கப் பட்ட மனுக்களாக இருந்த காரணத்தினால் முதல் மனுவுடன் இணைக்கப்பட்டது. 5 வேட்பு மனுக்கள் உரிய ஆவணங்கள் இணைக்கப்படாத காரணத்தினாலும் முன் மொழிபவா்கள் வேட்புமனுக்களில் கையொப்பமிடாத காரணத்தினாலும் தள்ளுபடி செய்யப்பட்டது. அரக்கோணம் தொகுதியில் 29 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. மேலும் வேட்பாளா் விலகல் அறிவிப்பினை 30.03.2024 பிற்பகல் 3 மணி வரை அரசு விடுமுறை தினத்தினை (29.03.2024) தவிா்த்து பெற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30.3.2024 பிற்பகல் 3 மணியளவில் வேட்பாளா்களுக்கு சின்னம் ஒதுக்கீடு தோ்தல் நடத்தும் அதிகாரி அரக்கோணம் மக்களவைத் தொகுதி மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் முரளி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com