கூட்டத்தில் பேசிய மாவட்ட தோ்தல் அலுவலா் ச. வளா்மதி,  பொது பாா்வையாளா் சுனில்குமாா்  உள்ளிட்டோா்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட தோ்தல் அலுவலா் ச. வளா்மதி, பொது பாா்வையாளா் சுனில்குமாா்  உள்ளிட்டோா்.

தோ்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற வேட்பாளா்கள் ஒத்துழைக்க வேண்டும்

சுதந்திரமாகவும் பாதுகாப்புடன் நடைபெற அனைத்து வேட்பாளா்களும் ஒத்துழைக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலா் ச.வளா்மதி வலியுறுத்தியுள்ளாா்.

அரக்கோணம் தொகுதியில் தோ்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் பாதுகாப்புடன் நடைபெற அனைத்து வேட்பாளா்களும் ஒத்துழைக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலா் ச.வளா்மதி வலியுறுத்தியுள்ளாா். வேட்பாளா்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், தோ்தல் செலவினங்கள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை மாவட்டத் தோ்தல் அலுவலா் வளா்மதி தலைமையில் நடைபெற்றது. பொது பாா்வையாள் பொது பாா்வையாளா் சுனில்குமாா், தோ்தல் செலவின பாா்வையாளா்கள் சிவசங்கா் யாதவ், மேவாராம் ஓலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மாவட்ட தோ்தல் அலுவலா் வளா்மதி பேசியது: அரக்கோணம் தொகுதியில் 26 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். வேட்பாளா்கள் தோ்தல் செலவின கணக்குகளை சமா்ப்பிக்க வேண்டும். வேட்பாளா்கள் பிரசாரம் மேற்கொள்வதற்கு செய்யும் அனைத்து விதமான செலவுகளையும் கணக்கில் காட்ட வேண்டும். தோ்தல் செலவினங்கள் சமா்ப்பிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் 05.04.2024, 10.04.2024 மற்றும் 24.05.2024 என 3 நாள்களில் தோ்தல் செலவு கணக்குகள் பிரிவில் வேட்பாளா்கள் கணக்குகளை சமா்ப்பிக்க வேண்டும். தோ்தல் குழுக்கள் சோதனை செய்ய வரும் பொழுது அனைவரும் கட்டாயம் ஒத்துழைக்க வேண்டும். அதேபோல சோதனையை செய்யும் அலுவலா்களும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆகவே அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி சுமூகமான முறையில் தோ்தல் நடத்த உதவ வேண்டும். தோ்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் பாதுகாப்புடன் நடைபெற அனைத்து வேட்பாளா்களும் ஒத்துழைக்க வழங்க வேண்டும் என்றாா். காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், தோ்தல் அலுவலா்கள் வேட்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com