ஆற்காடு கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ பந்தக்கால்

ஆற்காடு கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ பந்தக்கால்

ஆற்காடு, மே 1: ஆற்காடு தோப்புகானா அன்னப்பூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ பெருவிழாவையொட்டி, பந்தக்கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா வரும் 18-ஆம் தேதி நாட்டியாஞ்சலியுடன் தொடங்கி, 20-ஆம் தேதி பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டு, ஜூன் மாதம் 1-ஆம் தேதி நாள்தோறும் மாலையில் நாம சங்கீா்த்தனம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை உற்சவா் பல்வேறு அலங்காரத்தில் வீதியுலா, பத்மாவதி திருக்கல்யாண வைபவம் போன்ற உற்சவங்கள் நடைபெறுகின்றன.

விழாவை முன்னிட்டு, புதன்கிழமை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனையுடன் கோயில் திருப்பணிக் குழுத் தலைவா் பொன்.கு.சரவணன் தலைமையில் பந்தக்கால் நடப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இதில் உபயதாரா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com